திருமண விழாவில் விதைபந்துகளை பரிசளியுங்கள்!

திருமணம் முதல் கார்ப்பரேட் விழாக்கள் வரையில் ஒரு பெட்டி 12 ரூபாய் என பரிசுப் பொருளாக இந்த விதைப்பந்துகளை மக்கள் வாங்கிச் செல்கிறார்கள்.

மாறும் காலநிலை, அதிகரிக்கும் இயற்கைப் பேரிடர்கள், பருவநிலை மாற்றம் எனப் பல இன்னல்கள் நம்மைத் தொடர்ந்து துரத்துகின்றன. இன்னல்களை சமாளிக்க புவி வெப்பமயமாதலைக் குறைக்கக் காடுகள் அவசியம். காடுகள் உருவாக மரங்கள் மிக அவசியம். அரசாங்கத்தால் மட்டும் தேடித்தேடி காடுகளை உருவாக்க முடியாது.

இதற்காகத்தான் பொதுமக்களும் இணைந்து பயணிக்க உதவுகின்றன விதைப்பந்துகள். இந்தியாவில் எந்தெந்தப் பகுதிகளில் எந்தெந்த மரங்கள் வளரும் எனக் கணக்கெடுத்து நாட்டு விதைகளை விதைப்பந்துகள் மூலம் பரவச் செய்யும் வழக்கம் தற்போது வளர்ந்து வருகிறது. இந்த விதைப்பந்துகளை விதைக்கச் செய்ய உதவுகிறார் கோயம்புத்தூர், அவினாசி பகுதியைச் சேர்ந்த ராமசாமி.

திருமண விழா, பிறந்தநாள் விழா, கார்ப்பரேட் விழாக்கள் எனப் பரிசளிக்க விதைப்பந்துகளை அளித்து வருகிறார் ராமசாமி. தனது விதைப்பந்து பயணம் குறித்து நம்முடன் பகிர்ந்த ராமசாமி, “இன்றையக் காலகட்டத்தில் விதைப்பந்துகளின் தேவையை மக்கள் உணரத் தொடங்கி உள்ளனர். விதைப்பந்துகள் ஒரு காட்டையே உருவாக்கும் ஆற்றல் கொண்டவை. விழாக் காலத்தில் விருந்தினர்களுக்கு செடிகளைப் பரிசு வழங்கியது போல் விதைப்பந்துகளையும் பரிசாக வழங்க முடியும்.

இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அட்டைப்பெட்டியில் ஆறு விதைப்பந்துகள் கொண்ட பெட்டியை வடிவமைத்துள்ளேன். திருமணம் முதல் கார்ப்பரேட் விழாக்கள் வரையில் ஒரு பெட்டி 12 ரூபாய் என பரிசுப் பொருளாக இந்த விதைப்பந்துகளை மக்கள் வாங்கிச் செல்கிறார்கள். Seed balls என்ற மையம் மூலம் விதைப்பந்துகளின் தேவை மற்றும் பயன்கள் குறித்து விளக்கி வருகிறோம். இதுவரையில் தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சம் விதைப்பந்துகளை உற்பத்தி செய்து மக்களிடம் பகிர்ந்துள்ளோம்” என்றார். இவரை தொடர்புகொள்ள https://seedballs.in/ இணையதளத்தில் அணுகவும்.

    Leave a Reply

    Your email address will not be published.*

    WhatsApp WhatsApp us