ஐ நா சபை

ஐ நா சபையின் கணக்கெடுப்பின் படி, இந்த பூமியில் 3 லட்சத்து 4 ஆயிரம் கோடி மரங்கள் உள்ளன, ஆனால் மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்து இப்போது வரை 46 % மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன.

இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் இந்த பூமியில் இருந்து 1530 கோடி மரங்கள் காணாமல் போகின்றன, அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 500 கோடி மரங்கள் மனித முயற்சியாலும், இயல்பாகவும் வளர்கின்றன, எப்படி பார்த்தாலும் ஓர் ஆண்டில் இழப்பு என்பது சுமார் 1030 கோடி மரங்கள், நாம் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மரங்களை வளர்க்க வேண்டும் என்பதை இந்த கணக்கு உணர்த்தும்.

மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக இங்கு 405 மரங்கள் உள்ளன, இந்த கணக்கீட்டுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் நிலை மிகவும் பரிதாபம், இங்கு ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக வெறும் 28 மரங்கள் மட்டும் தான் உள்ளது.

காடுகள் அனைத்துமே பறவைகள், வன விலங்குகள் மற்றும் நீரோட்டத்தாலும் தான் உருவாகி இருக்கிறது. அதே போல நாம், நாடு முழுவதும் விதைப்பந்துகளை தூவுவதன் மூலம் ஒரு சிறு மாற்றத்தையாவது உருவாக்க முடியும்.

விதைப்பந்து என்பது இரண்டு வகை மண் மற்றும் சாண எரு கலந்து, அந்த கலவைக்குள் நாட்டு மர விதைகளை வைத்து உருண்டையாக பிடிப்பது தான். விதைப்பந்துகளுக்கு மழைநீர் கிடைத்து வளரும் வரை விதைகளும் பாதுகாப்பாக இருக்கும்.

திருமண விழாக்களிலும், பிறந்த நாள் விழாக்களிலும் நம் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விதைப்பந்துகளை நினைவு பரிசாக கொடுக்கலாமே…

நன்றி!!!

Www.seedballs.in

Mob : 9500914545

Thanks to BBC: https://www.bbc.com/news/science-environment-34134366

    Leave a Reply

    Your email address will not be published.*

    WhatsApp WhatsApp us